வாழ்க இராமர் வாழ்க சீதை
வாழ்க இராமர் வாழ்க சீதை ஒரு கோயிலுக்குள் இரண்டு திருடர்கள், பூட்டை உடைத்துச் சாமி சிலைகளைத் திருடிக் கொண்டு இருந்தார்கள். அந்த வழியே சென்ற பரமார்த்தரும் சீடர்களும் அதைக் கண்டனர். “ஐயா! யார் நீங்கள்? ஏன் இந்தச் சிலைகளை எடுக்கிறீர்கள்?” என்று பணிவுடன் கேட்டார் பரமார்த்தர். குருவையும் சீடர்களையும் கண்ட திருடர்கள் முதலில் சற்று பயந்தார்கள். பிறகு சமாளித்துக் கொண்டு, “நாங்கள் வெளியூரில் இருந்து வருகிறோம். இங்கே உள்ள சிலைகளை எல்லாம் அங்கே கொண்டு போகப் போகிறோம்”…