பீர்பாலின் ஆச்சரியமான யோசனை – ஒரு குடம் அதிசயம் கதை
பீர்பாலின் ஆச்சரியமான யோசனை புத்திசாலித்தனம் என்றால் பீர்பாலின் பெயரே நினைவிற்கு வரும்.அவரின் திறமை, மிகப் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு நாள், காபூல் அரசர், பீர்பாலின் அறிவாற்றல் குறித்து கேள்விப்பட்டு, அதைச் சோதிக்க விரும்பினார்.அவர், அக்பர் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி,“என் அரண்மனைக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள்” என்று எழுதினார். அந்தக் கடிதம் அக்பரிடம் வந்தபோது, அவர் குழப்பமடைந்தார்.“ஒரு குடம் அதிசயம்? அதென்னவோ?” என்று யோசித்த அவர், பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்….