சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் | The King Who Learned a Lesson from an Ant

சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன் போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான். அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை மிகவும் சிறியடாக இருந்ததினால் அவனால் வெல்ல முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால் வெற்றி பெற்றன். தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன் காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து கொண்டான். தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம்…

Read More

நடப்பது எல்லாம் நன்மைக்கே | Everything Happens for a Good Reason – Tamil Moral Story

நடப்பது எல்லாம் நன்மைக்கே! காட்டு ராஜா சிங்கத்தின் குகை வாசலில், ஏகப்பட்ட மிருகங்களின் கூட்டம். காட்டு ராஜா, வேட்டையாடச் சென்றபோது, கால்விரலில் அடிபட்டு, விரல் துண்டாகி விட்டதென்று அறிந்து துக்கம் விசாரிக்கத்தான் காட்டுப் பிரஜைகளான மிருகங்கள் கூடியிருந்தன. ஒவ்வொரு மிருகமாக வரிசையில் நின்று, குகையின் உள்ளே சென்று, சிங்க ராஜாவைப் பார்த்து விட்டுத் திரும்பின. சிங்கராஜா காலில் பலமான கட்டுடன், கட்டிலில் படுத்துக் கிடந்தது. அருகே சிங்கராணி, வழியும் கண்­ரும் சிந்திய மூக்குமாக அமர்ந்து இருந்தது. ஒவ்வொரு…

Read More

மன்னின் மதிப்பு – முல்லா நஸ்ருதீன் வாழ்க்கைப் பாடக் கதை

 மன்னின் மதிப்பு ஒரு நாள் துருக்கி மன்னனும் முல்லாவும் அரண்மனைப் பழத்தோட்டதில் உலாவிக்கொண்டிருந்தனர். துருக்கி மன்னன் முல்லாவை நோக்கி ” முல்லா அவர்களே உங்களைப் பற்றி எல்லோரும் பெருமையாகப் பேசுகிறார்கள்! ஒரு மனிதனைப் பார்த்த மாத்திரத்திலேயே அவனை மனத்திற்குள் எடை போட்டுப் பார்த்து அவடைய மதிப்பு என்ன என்ற கூறி விடுவீர்களாமே! ” என்று கேட்டார். ” அல்லாவின் அருளால் எனக்கு அப்படிப் பட்ட ஒரு ஆற்றல் இருக்கிறது என்று தான் நான் நினைக்கிறேன் ” என்று…

Read More

முல்லாவின் உடைவாள் – நகைச்சுவையுடன் கூடிய சிந்தனைக்கதை

முல்லாவின் உடைவாள்! முல்லா ஒரு தடவை அயல்நாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்தது. அந்தக் காலத்தில் எவ்வளவு தொலைதூரமாக இருந்தாலும் கழுதையின் மீது சவாரி செய்துதான் செல்ல வேண்டும். முல்லா செல்ல வேண்டியிருந்ததோ பயங்கரமான காட்டு வழி. அங்கு கள்வர் பயமும் உண்டு. முல்லா நீண்ட தொலைவு பணயம் புறப்பட்ட செய்தியை அண்டை வீட்டுக்காரர் அறிந்து மிகவும் கவலைப்பட்டார். அவர் முல்லாவை நோக்கி முல்லா அவ்வளவு நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்களே. வழியில் கள்வர் பயம் அதிகமாயிற்றே. நீர் பாதுகாப்பாகச்…

Read More

செயற்கரிய சாதனை

செயற்கரிய சாதனை ஒருநாள் முல்லா ஒரு காட்டு வழியாக வெளியூருக்குச் சென்று கொண்டிருந்தார். வழியில் ஒரு முரடனிடம் அவர் சிக்கிக் கொண்டு விட்டார். அந்த முரடனுக்கு முல்லாவைப் பற்றியும், அவருக்கு இருக்கும் புகழைப் பற்றியும் நன்றாகத் தெரியும். அவரை அவமானப்படுத்த எண்ணிய முரடன் தன் கைவாளை உருவிக் கொண்டு ” முல்லா அவர்களே உம்மைப் பெரிய மேதாவி என்றும் எவ்வளவு பெரிய ஆபத்து ஏற்பட்டாலும் உம்முடைய அறிவினாலேயே தப்பிப் பிழைப்பீர் என்றும் பேசிக் கொள்கிறார்களே அது உண்மைதானா?”…

Read More

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம் முல்லாவின் நண்பர் ஒருவர் முல்லாவிடம் வந்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தார,; அவர் முல்லாவிடம் விடைபெற்றுக் கொண்டு எழுந்தபோது அவரை நோக்கி ” முல்லா அவர்களே தாங்கள் பலவிதத்திலும் மக்களிடம் புகழ் பெற்றவராகத் திகழுகிறீர். மன்னரிடம் உங்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கிறது. இவ்வாறெல்லாம் நீங்கள் புகழும் பெருமையும் பெறுவதற்கு ஏதோ ஒரு ரகசியம் இருக்க வேண்டும். அந்த ரசகசியம் என்னவென்று தயவு செய்து எனக்குக் கூறுவீர்களா?” என்று கேட்டார். ” உண்மையிலே என் வெற்றிக்கு…

Read More

உலகத்தில் சிறந்தது

உலகத்தில் சிறந்தது முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். முல்லாவின் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் அவரை எப்போதுமே தன்னுடன் வைத்துக் கொண்டு அவருடன் உரையாடி மகிழ்ந்தார். மன்னர் உணவருந்தும் சமயத்திலெல்லாம் முல்லாவையும் தம்முடன் அமர்ந்து உணவருந்தச் சொல்வார். ஒருநாள் மன்னரும் முல்லாவும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர். அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது. மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார். சாப்பாட்டின் இடையே…

Read More

முல்லாவின் புத்திசாலித்தனம்!

முல்லாவின் புத்திசாலித்தனம்! ஒரு பெரிய செல்வந்தனிடம் கொஞ்ச காலம் முல்லா வேலை பார்த்து வந்தார். ஒரு நாள் முல்லா தொடர்ந்து மூன்று தடவை கடைத் தெருவுக்குச் சென்று வந்ததை அவருடைய முதாளி கண்டு அவரைக் கூப்பிட்டு விசாரித்தார். ” நீர் ஏன் மூன்று தடவை கடைக்குச் சென்றீர்?” என்று கேட்டார் அவர். ” கோதுமை வாங்குவதற்காக ஒரு தடவை கடைக்குப் போனேன். அடுத்த தடவை நான் போனது முட்டை வாங்குவதற்காக மூன்றாவது தடவையாக எண்ணெய் வாங்கச் சென்றேன்…

Read More

எல்லோரும் சோம்பேறிகள்!

எல்லோரும் சோம்பேறிகள்! சந்தை கூடும் இடத்தில் ஒரு உயர்ந்த இடத்தில் முல்லா நின்று கொண்டார். மக்கள் சந்தையை நோக்கிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருந்தனர். ” அன்பார்ந்த நண்பர்களே? உங்களுக்கு உங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற அருமையான சில யோசனைகள் என்னிடம் இருக்கின்றன. இவற்றை காது கொடுத்துக் கேட்க வேண்டும் என்று நினைப்பவர்கள் அருள் கூர்ந்து சற்று நில்லுங்கள் ” என்று முல்லா உரத்த குரலில் கூறினார். முல்லா என்ன சொல்லப் போகிறார் என்று அறிந்து கொள்வதற்காக…

Read More

பிரார்த்தனை

பிரார்த்தனை ஒரு தடவை முல்லா கப்பல் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். கப்பல் திசைமாறி தாறுமாறாக அலையத் தொடங்கியது. கரையே பல நாட்கள் கண்களில் தென்படவே இல்லை. உணவும் குடிநீரும் முற்றிலும் தீர்ந்து விட்டன. கப்பலின் பயணம் செய்தவர்களுக்குத் தாங்கள் உயிர்பிழைக்க மாட்டோம் என்ற அச்சம் ஏற்பட்டு விட்டது. அதனால் பிரயாணிகள் அனைவரும் தரையில் மண்டியிட்டுப் பிரார்த்தனை செய்யத் தொடங்கினர். தான் உயிர்பிழைத்தால் தன்னுடைய வீடு வாசல்களை எல்லாம் ஏழை எளிய மக்களுக்குத் தருமம் செய்து விடுவதாக ஒருவர்…

Read More