சகடா சூரவதம்
சகடா சூரவதம் குழந்தை கிருஷ்ணர் சற்று வளர்ந்த பின், குப்பிறப்படுக்கத் துவங்கினார். மற்றொரு விழாவை யசோதாவும் நந்தமகாராஜாவும் கொண்டாடினார்கள், அது கிருஷ்ணரின் முதலாவது பிறந்தநாள் விழாவாகும். அவர்கள் கொண்டாடிய கிருஷ்ண ஜெயந்தி விழா, இன்றும் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. அவ்விழாவுக்கு பெருந்திரளானவர்கள் வந்து விழாவில் குதூகலமாக கலந்துகொண்டனர். நேர்த்தியான வாத்தியக்குழு ஒன்று இசை பொழிய, கூடியிருந்த மக்கள் அதை ரசித்தனர். கற்றறிந்த பண்டிதர்கள் எல்லோரும் விழாவுக்கு அழைக்கப் பட்டிருந்தனர். பிராமணர்களான அவர்கள், கிருஷ்ணரின் நன்மை கருதி வேத பாராயணம்…