காட்டுத் தீயை அணைத்தல்

காட்டுத் தீயை அணைத்தல் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காலிங்கன் மீது நடனமாடிவிட்டு யமுனை நதியில் இருந்து வெளி வந்தபோது இரவாகி விட்டதால் விருந்தாவன வாசிகளும், பசுக்களும், கன்றுகளும் மிகவும் களைப்படைந்து, யமுனை நதிக் கரையிலலேயே ஓய்வெடுத்துக் கொள்வதென்று தீர்மானித்தார்கள். இவ்வாறு அவர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது, நள்ளிரவில் திடீரென்று காட்டில் நெருப்புப் பற்றிக் கொண்டது. விரைவில் விருந்தாவன வாசிகள் எல்லோரும் நெருப்புக்கு இரையாகி விடக்கூடுமென்ற அச்சம் ஏற்பட்டது. நெருப்பின் உஷ்ணம் அவர்களைத் தகிக்கத் தொடங்கியதும் அவர்கள் முழுமுதற் கடவுளான…

Read More

பிரலம்பாசுர வதம்

பிரலம்பாசுர வதம் ஒரு நாள் பகவான் ஸ்ரீகிருஷ்ணரும் பலராமரும் மற்றும் கோபாலச் சிறுவர்களும் விருந்தாவனத்தின் காட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது, பிரலம்பாசுரன் என்ற பெயருடைய அரக்கன் அவர்களிடையே புகுந்து பலராமரையும் கிருஷ்ணரையும் கொல்ல விளைந்தான். கிருஷ்ணர் அப்போது ஆயர்குலச் சிறுவனாக விளையாடிக் கொண்டிருந்தார் என்றாலும், முழுமுதற் கடவுளாகிய அவர் முக் காலங்களையும் உணர்ந்தவர் அல்லவா? எனவே, பிரலம்பாசுரன் அவர்களிடையே வந்து புகுந்ததும் அவனை எப்படிக் கொல்வதென்று முடிவெடுத்தார். வெளிப்படையாக, ஒரு நண்பனைப் போல் வரவேற்று,அன்பான நண்பனே, எங்களின் விளையாட்டில்…

Read More

கோவர்த்தன கிரியைப் பூஜித்தல்

 கோவர்த்தன கிரியைப் பூஜித்தல் விருந்தாவன வாசிகள் இந்திரனைத் திருப்திப் படுத்துவதற்காக ஒரு யாகத்தை நடத்த ஏற்பாடு செய்து கொண்டிருந்தார்கள். இந்திரனைத் திருப்திப் படுத்தினால் மழை வருமென்று நம்பப்பட்டது. இதைப் பற்றிக் கேள்விப்பட்ட கிருஷ்ணர், தன் தந்தை நந்தமகாராஜாவிடம் அதுபற்றிப் பணிவுடன் கேட்டார். நந்தமகாராஜா சிறிது நேரம் மௌனமாக இருந்தார். யாகத்தின் நுணக்கங்களைச் சிறுவனான கிருஷ்ணரால் புரிந்துகொள்ள முடியாதென்று அவர் நினைத்தார். ஆனால் கிருஷ்ணர் விடவில்லை. அந்த விபரங்களை விரிவாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு நந்தமகாராஜா கூறினார்:…

Read More

யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல்

யாகங்கள் நடத்திய அந்தணர்களின் மனைவியருக்கு முக்தி அளித்தல் வழக்கம்போல கிருஷ்ணரும் பலராமரும் அவர்களது நண்பர்களுடன் யமுனை நதிக் கரைக்குச் சென்றிருந்தபோது, ஆயர் சிறுவர்கள் காலை உணவு உண்டிராததால் மிகவும் பசியாக இருந்தார்கள். அவர்கள் கிருஷ்ணரையும் பலராமரையும் அணுகி இவ்வாறு கூறினார்கள்: “அன்பான கிருஷ்ணா, பலராமா, நாங்கள் இன்று பசியாக இருக்கிறோம். எங்கள் பசியைப் போக்குவதற்கான உபாயம் ஏதாவது கூறுங்கள்”. என்று கூறினார்கள். நண்பர்கள் இவ்வாறு வேண்டிக் கொண்டபோது கிருஷ்ணரும் பலராமரும் அச்சமயம் யாகங்கள் நடத்திக் கொண்டிருந்த சில…

Read More

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல்

கோவர்த்தன கிரியைக் குடையாகப் பிடித்தல் விருந்தாவனத்தின் ஆயர்கள் இந்திரனுக்காக ஏற்பாடு செய்திருந்த யாகத்தைக் கிருஷ்ணர் தடுத்து விட்டார் என்று அறிந்தபோது இந்திரன் மிகுந்த கோபம் கொண்டு, தன் கோபத்தை விருந்தாவன வாசிகளின் மீது காட்டினான். யாகம் நிறுத்தப்பட்டதற்கு கிருஷ்ணரே காரணம் என்பதை அறிந்திருந்த போதிலும், பழியை நந்தமகாராஜாவின் தலைமையிலான ஆயர்களின் மீது தீர்க்க முற்பட்டான். பலவகையான மேகங்களின் அதிபதியான இந்திரன், ஸாங்வர்த்தக என்ற மேகத்தை அழைத்தான். இந்த மேகம் பிரபஞ்சம் முழுவதையும் அழிப்பதற்கான தேவை ஏற்படும் போதுதான்…

Read More

வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல்

 வருணனின் பிடியிலிருந்து நந்த மகாராஜாவை விடுவித்தல் கோவர்த்தன பூஜை அமாவாசையன்று நடைபெற்றது. அதன் பின் இந்திரன் ஏழு நாட்களுக்குப் பலத்த மழையும் புயலும் விழைவித்தான். சுக்ல பஷத்தின் ஒன்பது நாட்களுக்குப் பின் பத்தாவது நாள் தேவேந்திரன் கிருஷ்ணரை வழிபட்டபின் எல்லாம் திருப்தியாக முடிவடைந்தது. பின், பதினொன்றாம் நாள் ஏகாதசி வந்தது. அன்று முழுவதும் நந்தமகாராஜா உபவாசமிருந்து, மறுநாள் துவாதசியன்று அதிகாலை யமுனை நதியில் நீராடச் சென்றார். அவர் நதியின் ஆழமான இடத்துக்குச் சென்றபோது வருணதேவனின் ஆள் ஒருவன்…

Read More

வித்யாதரன் முக்தி

வித்யாதரன் முக்தி ஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற்…

Read More

வியோமாசுர வதம்

வியோமாசுர வதம் ஒரு நாள் காலையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் அவரது நண்பர்களும் கோவர்த்தன கிரியின் உச்சியில் விளையாடுவதற்காகச் சென்றார்கள். கள்வர்களும் காவலர்களுமாக அவர்கள் நடித்து விளையாடினார்கள். சிலர் கள்வர்களாகவும் சிலர் ஆட்டுக் குட்டிகளாகவும் பங்கேற்றார்கள். இவ்வாறு அவர்கள் குழந்தைகளாக விளையாடி மகிழ்கையில் வியோமாசுரன் என்ற பெயருடைய ஒரு அரக்கன் அங்கு தோன்றினான். வியோமாசுரன் என்றால் ஆகாயத்தில் பறக்கும் அசுரன் என்று பொருள். அவன் மற்றொரு மாபெரும் அசுரனான மாயா என்பவனின் மகன். இவ்வரக்கர்கள் பல மாயச்…

Read More

சங்காசுர வதம்

 சங்காசுர வதம் வித்யாதரன் முக்திக்குப் பின் ஒரு நாள் இனிமையான இரவில் எண்ணற்ற பலசாலிகளான பலராமரும் கிருஷ்ணரும் விருந்தாவனக் காட்டிக்குச் சென்றார்கள். அவர்களுடன் விரஜ பூமியின் நங்கையரும் சென்றிருந்தார்கள். அந்நங்கையர் நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சந்தனம் பூசப் பெற்று, மலர்களால் தம்மை அலங்கரித்திருந்தார்கள். ஆகாயத்தில் சந்திரன், நட்சத்திரங்கள் புடை சூழப் பிரகாசித்துக் கொண்டிருந்தான். சூழலின் இனிமையில் கிருஷ்ணரும் பலராமரும் இனிமையாகப் பாடினார்கள். அப்போது குபேரனின் நண்பனான ஒரு அசுரன் அங்கு தோன்றினான். அவன் தலையில் சங்கு வடிவிலான…

Read More

கேசி வதம்

கேசி வதம் பகவான் ஸ்ரீகிருஷ்ணரைக் கொல்வதற்காக கம்சன் தன் நண்பனான கேசி என்ற அரக்கனை விருந்தாவனம் செல்லுமாறு கட்டளையிட்டான். கம்சனின் கட்டளையைப் பெற்றதும் கேசி அசுரன் பயங்கரமான ஒரு குதிரையின் வடிவத்தை மேற்கொண்டு விருந்தவனப் பகுதிக்குள் நுழைந்தான். பிடரி மயிர் காற்றில் பறக்க, அவன் உரக்க கனைத்த ஒலி கேட்டு உலகமே நடுங்கியது. விருந்தாவன வாசிகள் பயந்து நடுங்கும்படி அவன் கனைத்து, வாலை ஆகாயத்தில் பெரும் மேகம் போல் சுழற்றியதைக் கிருஷ்ணர் கண்டார். குதிரை வடிவிலிருந்த அசுரன்…

Read More