பகுதி – 5

 பகுதி – 5 கானகத்தில் தன் குதிரையைக் கண்டுபிடித்துக் கொடுத்த அந்த அதிசயப் பக்கிரியை பக்தியோடு வணங்கி எழுந்த சாந்த் படீலுக்கு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியது. கடுமையான தாகம். என்னப்பா! தண்ணீர் வேண்டுமா? பரிவோடு கேட்ட பக்கிரி, கையில் இருந்த சிறிய தடியால் தரையில் ஒரு தட்டுத் தட்டினார். அடுத்த கணம் தரையிலிருந்து நீர் ஊற்று குபீரெனப் பொங்கியது! பஞ்சபூதங்களும் அவர் கட்டளைக்குப் பணிவதைப் பார்த்து சாந்த்படீலுக்கு மயக்கமே வந்தது. தங்களைப் படைத்தவருக்குத்தான் நிலம் நீர் நெருப்பு…

Read More

பகுதி – 4

பகுதி – 4 ஷிர்டியிலுள்ள வேப்ப மரத்தடியில் தியானம் செய்துகொண்டிருந்தானே வசீகரம் நிறைந்த இளைஞன் ஒருவன்! அவனை மறுநாள் காணோம். அதை அறிந்து, சொந்த மகனைத் தொலைத்தது போல், பாய்ஜா மாயி கண்களிலிருந்து கரகர வெனக் கண்ணீர் வழிந்தது. எங்கே போனான் அவன்? தாயுள்ளம் கொண்ட அந்த பக்தையின் கண்ணீரைக் காலம் தன் பேரேட்டில் குறித்துக்கொண்டது. அழுதால் அவனைப் பெறலாம் என்பதல்லவா சத்திய வாசகம்! இறைவனுக்காக அழுபவரைத் தேடி இறைவன் வராவிட்டால் அப்புறம் அவன் எப்படி இறைவனாவான்?…

Read More

பகுதி – 3

பகுதி – 3 ஷிர்டி கிராமத்துக் கோயில் பூஜாரி  சொன்னபடி கடப்பாரையால் வேப்பமரத்தின் அடிப்பகுதியைத் தோண்டத் தொடங்கினார்களே சிலர்! அப்போதுதான் யாரோ சீற்றத்தோடு பெருமூச்சு விடும் ஒலி கேட்டது… வேப்பமரத்தின் அருகாக இருந்த பாம்புப் புற்றிலிருந்து ஒரு ராஜநாகம் பெருமூச்சோடு உர்ரென்று தலையைத் தூக்கிச் சீறியது.  அத்தனை பெரிய நாகப்பாம்பை யாரும் அதுவரை பார்த்ததில்லை. அதன் குடைபோல் விரிந்தபடத்தையும் பளபளவென மின்னும் வழவழப்பான வசீகரத் தோற்றத்தையும் வியந்து பார்த்த மக்கள், நாகராஜா! எங்களைக் காப்பாற்று! என்று முணுமுணுத்தவாறே…

Read More

பகுதி – 1

பகுதி – 1 உண்மையிலேயே அந்தச் செய்தி ஷிர்டி கிராமத்தில் வாழ்ந்த மக்களைப் பெரும் வியப்பில் ஆழ்த்தியது. அதிகாலையில், ஷிர்டி பாபா வசிக்கும் மசூதிக்குச் சென்ற யாரோ ஒரு பெண்தான், முதன்முதலில் அந்த விந்தையான காட்சியைக் கண்டிருக்கிறாள். உடனே ஓடோடி வந்து, பக்கத்து வீட்டுக்காரியிடம் சொல்ல, விறுவிறுவென்று செய்தி பரவிவிட்டது. எல்லோரும் அவசர அவசரமாக பாபா வாழும் மசூதியை நோக்கி ஓடலானார்கள். பலருக்கு வேகமாக ஓட முடியாத நிலை… காலராவால் அவர்கள் உடல் மிகவும் தளர்ந்திருந்தது. சில…

Read More

பகுதி – 2

 பகுதி – 2 ஷிர்டி ஒரு சிறிய கிராமம். கடவுள் நம்பிக்கை கொண்ட எளிய மக்கள் அங்கே வாழ்ந்து வந்தார்கள். இறை சக்தி, பாபாவடிவில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள அந்த ஊரைத் தேர்ந்தெடுத்தது, அந்த ஊர் மக்கள் செய்த அதிர்ஷ்டம். நல்லவர்கள் அதிகமுள்ள இடத்தை இறைவன் விரும்புவது இயற்கைதானே! ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பெரிய வேப்பமரம். அதிகாலையில் காலாற நடந்துசென்று அந்த வேப்பமரக் குச்சியை ஒடித்து, பலர் ஒருவருக்கொருவர் பேசியவாறே பல் துலக்குவது உண்டு. அப்படியான ஓர்…

Read More

உயிர் பிரியும் நேரத்திலும்…

உயிர் பிரியும் நேரத்திலும்… சர் பிலிப் சிட்னி என்பவர் ஆங்கில அரசின் தளபதி சிறந்த கவிஞரான இவர் நல்லவர். சேவையில் ஆர்வமுள்ளவர். ஒர் முக்கியமான போர் ஒன்றில் சிட்னி கலந்து கொள்ள நேரிட்டது. வீரர்கள் பலரும் குண்டடிபட்டு இறந்தனர் சிட்னியும் பலத்த அடிபட்டதால் இறக்கும் நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு மிகவும் தாகமெடுத்தது தண்ணீர் தண்ணீர் என தீனமான குரலில் வேண்டினார். ஒருவர் அவசரமாக அவருக்கு தண்ணீர் கொண்டு வந்தார் அதை வாங்கிக் குடிக்கப்போகும் போது அருகில்…

Read More

நாகரீகம் என்பது நன்னடத்தையில் ..

நாகரீகம் என்பது நன்னடத்தையில் .. அமெரிக்க நாட்டிலுள்ள நியூயார்க் நகர வீதியில் சுவாமி விவேகானந்தர் நடந்து சென்று கொண்டிருந்தார் கையிலே ஒரு தடியுடன் உடலின் மீது ஒரு சால்வையை மட்டும் போர்த்தியபடி சுவாமிஜி சென்றார். அப்போது எதிரில் வந்த ஒரு ஆங்கிலேயப் பெண்மணி சுவாமிஜியின் தோற்றத்தைக் கண்டு மிகவும் சிரித்ததோடு மட்டுமின்றி கேலியாகவும் பேசினார். சிறிதாவது கோபம் வரட்டுமே சுவாமிஜிக்கு ஊஹும் புன்முறுவல் தவழும் முகத்துடன் அம்மா எங்கள் இந்திய நாட்டில் ஒருவர் அணியும் உடைகளை வைத்து…

Read More

சந்நியாசி கீதம் உருவான கதை!

சந்நியாசி கீதம் உருவான கதை! அமெரிக்காவில் தன் ரம்மியமான சிறகுகளை பிரித்துப் பாய்ந்து செல்லும் செயிண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அமைந்துள்ளது ஆயிரம் தீவுப் பூங்கா. அங்கு சுவாமி விவேகானந்தர் மிஸ் எலிசபெத் டச்சர் என்பவரின் குடிலில் 1895 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 19 ஆம் நாள்( புதன் கிழமை) முதல் ஆகஸ்டு 6ஆம் தேதி செவ்வாய்கிழமை வரை தங்கி யிருந்தார். மிஸ் டச்சர் அடங்கிய மாணவக் குழுவிற்கு தினசரி ஆன்மிக வகுப்புகள் எடுத்து வந்தார் சுவாமிஜி….

Read More

கொம்பில் அமர்ந்த கொசு!

கொம்பில் அமர்ந்த கொசு! ஒரு கொசு பறந்து வந்தது. ஒரு காளை மாட்டின் கொம்பு மீது அதுபோய் உட்கார்ந்தது.நீண்ட நேரம் அப்படியே இருந்தது. அதன் மனத்திற்குள் ஓர் உறுத்தல் நாம் வெகு நேராமாக இங்கேயே உட்கார்ந்திருக்கிறோமே… மாட்டுக்கு வலிக்காதா ? அது தாங்குமா? என்ன காளையாரே இங்கே நான் ரொம்ப நேரமாக உட்கார்ந்திருக்கிறேன் உங்களுக்குச் சிரமமாயிருக்கும் அதனாலே இதோ நான் புறப்பட்டு விட்டேன்! இதைக் கேட்டதும் காளைக்குச் சிரிப்பு வந்தது. கொசுவே நீ போக வேண்டியதில்லை… வேண்டுமானால்…

Read More

இறுதி மூச்சு வரை உன் பணியே!

இறுதி மூச்சு வரை உன் பணியே! ராம லக்ஷ்மணர்கள் சுக்ரீவன் உள்ளிட்ட வானரசேனை, அத்துடன் பராக்கிரம அனுமன் இத்தனை பேரும் ஒன்று கூடி ராவணேஸ்வரன் பிடியிலுள்ள சீதையை எவ்வாறு மீட்பது என்று ஆலோசித்தனர். சுக்ரீவன் வானரங்களை திசைக்கொருவராய்ச் செல்ல உத்தரவிட்டான் பின் அனுமனைப் பார்த்து. பலம், புத்தி நன்னெறி, இடத்திற்கும் காலத்திற்கும் உகந்த வண்ணம் நடத்தல் ஆகிய எல்லா குணங்களும் கொண்டவரே சீதையை மீட்கும் வழியைச் சொல்லுங்கள் என்றான். சுக்ரீவனின் வார்த்தைகளும் அனுமனின் தோற்றமும் ஸ்ரீராமபிரானுக்கு ,…

Read More