காகமும் மகாராணியின் நெக்கிளேசும்
காகமும் மகாராணியின் நெக்கிளேசும் ஒரு காட்டில் ஒரு காகம் கூடுகட்டி வாழ்ந்து வந்தது. அக் காகம் விவாகமாகி ஆண் காகமும் பெண்காகமும் அக்கூட்டிலே வாழ்ந்தனர். பல நாட்கள் சென்ற பின் பெண் காகம் 5 முட்டைகள் இட்டது. அதனைக் கண்ட ஆண்காகம் தான் ஐந்து பிள்ளைகளுக்கு தந்தையாக போவதையிட்டு மிக மகிழ்ச்சியடைந்தது. பெண்காகம் முட்டைகளை அடைகாத்து வந்தது. ஆண் காகம் பெண் காகத்திற்கு வேண்டிய இரையை தேடிக்கொடுத்து பெண்காகம் அடைகாப்பதற்கு உதவி செய்தது, இருவரும் தமக்கு 5…