அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல்

அக்ரூரர் விருந்தாவனத்திலிருந்து திரும்பும்போது யமுனை நதியிலிருந்த விஷ்ணு லோகத்தைக் காணல் கம்சன் தனுர் யாகம் ஒன்றினைச் செய்வதற்கு ஏற்பாடு செய்திருந்தான். அதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு அழைத்து வருமாறு அக்ரூரரை அனுப்பினான். கிருஷ்ணரும் பலராமரும் மதுராவிற்கு வந்தபின் அவர்களைக் கொல்வதென்று முடிவெடுத்தான். அக்ரூரர் கம்சனின் நம்பிக்கைக்குரிய நண்பனாக இருந்தார். அதேவேளை அவர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மிக உயர்ந்த பக்தருமாவார். விருந்தாவனம் சென்ற அக்ரூரர் கிருஷ்ணரையும் பலராமரையும் மதுராவிற்கு கம்சனால் அழைக்கப்பட்டிருந்த செய்தியைக் கூறினார்….

Read More

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல்

கம்சனின் வேலையாளை சிரச்சேதம் செய்தல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுரா நகரின் வீதிகளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு சலவைத் தொழிலாளியைக் கண்டார்கள். அவன் உடுப்புகளுக்குச் சாயம் போடுபவன். கிருஷ்ணர் அவனிடம் சில நேர்த்தியாகச் சாயம் போடப்பட்ட உடுப்புகளைக் கொடுத்தால் அவனுக்கு எல்லா நலன்களும் பெருகுமென்று அவனிடம் கூறினார். கிருஷ்ணரிடம் உடுப்புக்கள் இல்லையென்று இல்லை. அவருக்கு உடுப்புக்கள் தேவைப்படவுமில்லை. ஆனால் அவர் வேண்டுவதைக் தர எல்லோரும் தயாராக இருக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவதற்காகவே அவ்வாறு கேட்டார். கிருஷ்ணர் வேண்டுவதைத்…

Read More

பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்

பூ வியாபாரிக்கு அனுக்கிரகம் அளித்தல்’ பகவான் ஸ்ரீ கிருஷ்ணரும் பலராமரும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது சுதாமா என்ற பெயருடைய பூக்கடைக் காரரிடம் சென்றார்கள். அவர்கள் கடையை அணுகியதும் பூ வியாபாரி வெளியே வந்து மிகுந்த பக்தியுடன் அவர்களின் காலில் விழுந்து வணங்கினார். பின், கிருஷ்ணரையும் பலராமரையும் தகுந்த ஆசனங்களில் இருக்கச் செய்து, உதவியாளர்களைப் பூவும் தாம்பூலமும் கொண்டு வரும்படி பணித்தார். வியாபாரியின் வரவேற்பால் கிருஷ்ணர் மிகவும் திருப்தி அடைந்தார். மிகுந்த பணிவுடன் பூ வியாபாரி…

Read More

தையல்காரனுக்கு முக்தி வழங்குதல்

தையல்காரனுக்கு முக்தி வழங்குதல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கம்சனின் வேலையாளைச் சிரச்சேதம் செய்தபின் பலராமருடனும் அவர்களது கோபால நண்பர்களுடனும் மதுராவின் வீதிகளில் தொடர்ந்து சென்று கொண்டிருந்தபோது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தனான தையல்காரன் ஒருவன் சில அழகிய ஆடைகளைத் தைத்துக் கொண்டு வந்தான். இவ்வாறு அழகாக உடுத்துக் கொண்ட கிருஷ்ணரும் பலராமரும் அழகிய வண்ண ஆடைகளைத் தரித்த யானைகளைப் போல் காட்சியளித்தார்கள். தையல்காரனின் செயல் கிருஷ்ணருக்கு மகிழ்ச்சியைத் தந்தது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவனுக்கு ஸாருப்ய முக்தி…

Read More

ஐயோ என்று சொல்லினால் உயிரை காப்பாற்றும் கதையொன்று | தமிழ் சிறு கதை

ஆபத்தான வேளையில் ஐயோ என்று குழறலாமா? ஒரு மரவெட்டி மரத்தின் கிளைமீது அமர்ந்து கொண்டு  அந்தக் கிளையையே வெட்டினானாம். உமாதேவியார் பார்த்துவிட்டு, இவன் என்ன முட்டாளாக இருக்கிறானே, கீழே விழுந்து சாக அல்லவா போகிறான் என்று சிவபெரிமானிடம் சொன்னாராம். அதற்கு அவர் சொன்னாராம், சரி அவன் உதவிக்கு உன்னைக் கூப்பிட்டால் நீ போய் காப்பாற்று; என்னைக் கூப்பிட்டால் நான் காப்பாற்றுகிறேன் என்றாராம். இருவரும் மிகவும் கவனமாக அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலோடு பார்த்துக்கொண்டிருந்தார்களாம். அவன்…

Read More

செய்யும் செயலில் கவனம் வேண்டும் – கவனமில்லாத முயற்சியின் விளைவுகள் | Focus on Action – Lesson from Distraction

செய்யும் செயலில் அவதானம் வேண்டும் ஒரு ஊரில் ஒரு இளம் பெண் பால் விற்று ஜீவியம் செய்து வந்தாள். அவள் தினமும் தன்னிடம் இருந்த ஒரு பசு மாட்டிலிருந்து பாலைக் கறந்து அதை ஒரு குடத்திலிட்டு தன் தலையில் வைத்து எடுத்துச் சென்று வியாபாரம் செய்து வந்தாள்.  தான் ஏழையாக இருப்பதனாலே இப்படி தினமும் பால் விற்று சீவிக்க வேண்டி உள்ளது என் போன்ற மற்றப் பெண்கலெல்லாம் விதம் விதமாக ஆடை அணிந்து எடுப்பாகச் செல்கிறார்களே என…

Read More

சிங்கமும் நரியும் – The Lion and the Fox | Moral Story in Tamil & English

சிங்கமும் நரியும் ஒரு கா‌ட்டி‌ல் பல ‌வில‌ங்குக‌ள் வா‌ழ்‌ந்து வ‌ந்தன. அ‌தி‌ல் ஒரு ‌சி‌ங்கமு‌ம், ந‌ரியு‌ம் வெகு நாளாக உண‌வி‌ன்‌றி அலை‌ந்து ‌தி‌ரி‌ந்து கொ‌‌ண்டிரு‌ந்தன. ஒரு நா‌ள் இர‌ண்டு‌ம் நேரு‌க்கு நே‌ர் ச‌ந்‌தி‌த்து த‌த்தமது ‌நிலைமையை புல‌ம்‌பி‌க் கொ‌ண்டன. இறு‌தியாக இர‌ண்டு‌ம் சே‌ர்‌ந்து வே‌ட்டையாடுவது எ‌ன்ற முடிவு‌க்கு வ‌ந்தன. அத‌ற்கு ‌சி‌ங்க‌ம் ஒரு ‌தி‌ட்ட‌ம் வகு‌த்து‌க் கொடு‌த்தது. அதாவது, ந‌ரி பலமாக ச‌த்த‌ம் போ‌ட்டு க‌த்த வே‌ண்டு‌ம். அ‌ந்த ச‌த்த‌த்தை‌க் கே‌ட்டது‌ம் கா‌ட்டு ‌வில‌ங்குக‌ள் ‌மிர‌ண்டு அ‌ங்கு‌ம்…

Read More

குரங்கு அறிஞர் | The Monkey Scholar

குரங்கு அறிஞர் ஒரு அறிஞர் ஆராய்ச்சி நூல் ஒன்று எழுதுவதற்காக அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார். அவர் அறியாமல், அரக்கர்கள் இருந்த பள்ளத்தாக்கை தன் இடமாகத் தேர்ந்தெடுத்தார். கோபமடைந்த ஒரு அரக்கன் அவரைப் பார்த்துக் கேட்டான். “”யார் நீ? இந்த அமைதியான பள்ளத்தாக்கை கெடுக்க வந்தாயா?” என்றான். “”தயவு செய்து என்னை மன்னித்து விடு. நான் ஒரு அறிஞன். அமைதியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தேன். அதனால், இங்கு வந்தேன்!” என்றார். “”இதற்கு ஒரு விலை நீ கொடுக்க…

Read More

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை – ஒரு குடம் அதிசயம் கதை

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை புத்திசாலித்தனம் என்றால் பீர்பாலின் பெயரே நினைவிற்கு வரும்.அவரின் திறமை, மிகப் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு நாள், காபூல் அரசர், பீர்பாலின் அறிவாற்றல் குறித்து கேள்விப்பட்டு, அதைச் சோதிக்க விரும்பினார்.அவர், அக்பர் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி,“என் அரண்மனைக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள்” என்று எழுதினார். அந்தக் கடிதம் அக்பரிடம் வந்தபோது, அவர் குழப்பமடைந்தார்.“ஒரு குடம் அதிசயம்? அதென்னவோ?” என்று யோசித்த அவர், பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்….

Read More