நில் எதிர்த்து நில்!
நில் எதிர்த்து நில்! காசியின் அழகிய கோயில்களுள் ஒன்று துர்க்கா கோயில். ஒரு நாள் அங்கே சென்று தேவியைத் தரிசித்து விட்டு. ஓர் ஒற்றையடிப் பாதை வழியாகத் திரும்பி வந்து கொண்டிருந்தார் சுவாமி விவேகானந்தர். ஒரு பக்கம் பெரிய குளம் மறுபக்கம் உயர்ந்த மதிற்சுவர் . அந்தப் பாதை வழியாக அவர் சென்று கொண்டிருந்த போது ஒரு குரங்குக் கூட்டம் அவரை எதிர்த்தது. சுவாமிஜியின் வேகம் தடைப்பட்டது அவர் முன்னேறத்தயங்கினார். அவர் பின்வாங்குவதைக் கண்டதும் குரங்குகள் அவரை…