வித்யாதரன் முக்தி
வித்யாதரன் முக்தி ஒரு சமயம் நந்தமகாராஜாவின் தலைமையிலான கோபாலர்கள் அம்பிகா வனம் சென்று சிவராத்திரி பூஜை செய்ய விரும்பினார்கள். அம்பிகா வனம் குஜராத் மாநிலத்தில் உள்ளது. அது சரஸ்வதி நதிக்கரையில் உள்ளதாகச் சொல்லப்படுவதுண்டு. சரஸ்வதி நதியின் கரையிலிருந்த அம்பிகா வனத்துக்கு நந்தமகாராஜாவும் ஆயர்களும் சென்றார்கள். அம்பிகா வனத்தை அடைந்ததும் விருந்தாவன ஆயர்கள் முதலில் சரஸ்வதி நதியில் நீராடினார்கள். புண்ணிய தலங்களுக்கு செல்பவர்கள் முதலில் அங்குள்ள தீர்த்தத்தில் நீராடுவார்கள். சில சமயங்களில் அவர்கள் முடியிறக்குவதும் உண்டு. நீராடுவது முதற்…