அகாசுர வதம்
அகாசுர வதம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தம் தோழர்களுடன் பால்ய லீலைகளில் திளைத்திருந்த போது, அகாசுரன் என்ற அரக்கன் மிகவும் பொறுமை அற்று இருந்தான். கிருஷ்ணர் விளையாடியதை அவனால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. எனவே, அந்தச் சிறுவர்கள் எல்லோரையும் கொல்லும் எண்ணத்துடன், அவன் அவர்களின் முன்பு தோன்றினான். வானுலகத்தினர் எல்லோரும் பயப்படும் அளவிற்கு அவன் பயங்கரமான தோற்றம் உடையவனாக இருந்தான். அகாசுரன் என்ற அந்த அரக்கன் பூதகி மற்றும் பகாசுரனின் சகோதரன் ஆவான். கிருஷ்ணர், தன் சகோதரனையும்…