பக்திப் பாடல்கள்
விநாயகர் நான்மணிமாலை வெண்பா சக்திபெறும் பாவாணர் சாற்றுபொருள் யாதெனினும்சித்திபெறச் செய்வாக்கு வல்லமைக்கா – அத்தனே!நின்றனுக்குக் காப்புரைப்பார் நின்மீது செய்யுநூல்இன்றிதற்குங் காப்பு நீயே. (1) கலித்துறை நீயே சரணம் நின தருளே சரணஞ் சரணம்நாயேன் பலபிழை செய்து களைத்துனை நாடிவந்தேன்வாயே திறவாத மௌனத் திருந்துன் மலரடிக்குத்தீயே நிகர்த்தொளி வீசுந் தமிழ்க்கவி செய்குவனே. (2) விருத்தம் செய்யுந்தொழிலுன் தொழிலே காண்; சீர்பெற்றிட நீ யருள் செய்வாய், வையந் தனையும் வெளியினையும் வானத்தையு முன் படைத்தவனே! ஐயா, நான் முகப் பிரமா,…