பீர்பாலின் நகைச்சுவை பதில் – புகையிலை சம்பவம் | Akbar Birbal Tamil Story

பீர்பால் அடிக்கடி புகையிலை பயன்படுத்துவார். மன்னர் பலமுறை சொல்லியும், அந்த பழக்கத்தை அவர் மாற்றிக் கொள்ள முடியவில்லை.அக்பரின் மூத்த அமைச்சருக்கு இந்த பழக்கம் மிகவும் பிடிக்காமல் இருந்தது. ஒருநாள், இதற்காக பீர்பாலை அவமானப்படுத்த வேண்டும் என்று அவர் திட்டமிட்டார். ஒருமுறை, மன்னர் அரண்மனைத் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார். அவருடன் மூத்த அமைச்சரும் பீர்பாலும் இருந்தனர்.அப்போது, தோட்டத்தின் வேலியோரத்தில் தானாக முளைத்த புகையிலைச் செடியைக் கழுதை ஒன்று சாப்பிட முயன்றது. ஆனால் இலையின் காரமும் நாற்றமும் பிடிக்காமல், அதைத்…

Read More

குளிரை வென்ற இளைஞன் – பீர்பாலின் நியாயமான தீர்ப்பு

குளிர்கால இரவில், அரண்மனையின் வளாகத்தில் அக்பரும் பீர்பாலும் உரையாடிக் கொண்டிருந்தனர். காற்றின் கடுமையான தாக்கத்தில் அக்பர், “இவ்வளவு கடும் குளிரில், யமுனை ஆற்றில் கழுத்தளவு நீரில் ஒருவரால் முழு இரவும் நிற்க முடியுமா? யாராவது முடித்தால், அவருக்கு ஆயிரம் பொற்காசுகள் பரிசாக தருவேன்” என்று அறிவித்தார். செய்தி நகரமெங்கும் பரவியது. மறுநாள், ஒரு இளைஞன் தன்னம்பிக்கையுடன் சவாலை ஏற்றுக்கொண்டான். இரவு, காவலர்களின் கண்காணிப்பில் அவன் ஆற்றுக்குள் இறங்கி, நடுங்கும் குளிரிலும் பொறுமையுடன் நின்றான். மனதில் பரிசை நினைத்து,…

Read More

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை – ஒரு குடம் அதிசயம் கதை

பீர்பாலின் ஆச்சரியமான யோசனை புத்திசாலித்தனம் என்றால் பீர்பாலின் பெயரே நினைவிற்கு வரும்.அவரின் திறமை, மிகப் பெரிய சிக்கல்களையும் எளிதில் தீர்க்கும் வல்லமை கொண்டது. ஒரு நாள், காபூல் அரசர், பீர்பாலின் அறிவாற்றல் குறித்து கேள்விப்பட்டு, அதைச் சோதிக்க விரும்பினார்.அவர், அக்பர் சக்கரவர்த்திக்கு ஒரு கடிதம் அனுப்பி,“என் அரண்மனைக்கு ஒரு குடம் அதிசயம் அனுப்புங்கள்” என்று எழுதினார். அந்தக் கடிதம் அக்பரிடம் வந்தபோது, அவர் குழப்பமடைந்தார்.“ஒரு குடம் அதிசயம்? அதென்னவோ?” என்று யோசித்த அவர், பீர்பாலிடம் ஆலோசனை கேட்டார்….

Read More

காயத்ரி மந்திரத்தின் மகத்துவம் – பீர்பால் சொன்ன பாடம்

ஒரு நாள், மன்னர் அக்பரும் அவரது நுண்ணறிவு மந்திரியாகிய பீர்பாலும் வேடமிட்டு நகரம் முழுவதும் மக்களின் நிலையை அறிந்துகொண்டு நடந்து சென்றனர். அந்தச் சமயத்தில், சாலையில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ஒருவரை அக்பர் பார்த்து,“இவர்கள் பிச்சை எடுப்பதைத் தவிர வேறு வேலை செய்யத் தெரியாதவர்களா?” என்று கேள்வியிட்டார்.அந்த வார்த்தைகள் பீர்பாலின் மனதில் பதிந்தன. பின்னர், பீர்பால் அந்த பிச்சைக்காரரை தனியாகச் சந்தித்து, காரணம் கேட்டார். அவர் பெரிய குடும்பத்தைச் செழிக்க வைக்க வேறு வழியின்றி பிச்சை எடுப்பதாகவும்,…

Read More

பொற்காசுகளை திருடிய செல்வந்தர்

பொற்காசுகளை திருடிய செல்வந்தர் உடனே கிழவியை நோக்கி, “அம்மா! உன் பை என் இடமே இருக்கட்டும். நீ சொல்வது உண்மையானால் உன் பொற்காசுகள் உனக்குத் திரும்பக் கிடைக்கும்” என்றார். “அந்தக் கடவுள் சத்தியமாக நான் சொன்னது உண்மை!” என்று ஆணித்தரமாகக் கிழவி கூற, “அம்மா! நாளை மறுநாள் வா! அதற்குள் உண்மை புலனாகும்” என்றார் அக்பர். கிழவியும் சலாம் செய்துவிட்டுச் சென்றாள். அதன்பிறகு தர்பார் கலைந்தது. அனைவரும் எழுந்து செல்ல, பீர்பால் பையைக் கையில் ஏந்திக் கொண்டு…

Read More

விலைமதிப்புள்ள பொருள்

விலைமதிப்புள்ள பொருள் சக்கரவர்த்தி அக்பர் திடீர் திடீரென உணர்ச்சிவசப்படுபவர்! அவர் எப்போது உற்சாகத்துடன் இருப்பார், எப்போது எரிந்து விழுவார் என்று சொல்ல முடியாது. பல சமயங்களில், அவரையே கேலி செய்வதுபோல் அமைந்துள்ள நகைச்சுவைத் துணுக்குகளைக் கேட்டும் கோபம் அடையாமல் சிரிக்கவும் செய்வார். ஆனால், சில சமயங்களில் சில சாதாரண துணுக்குகள் கூட அவரை கோபமுறச் செய்யும். தர்பாரிலுள்ள அனைவருக்கும் அக்பரின் அடிக்கடி மாறுபடும் மனநிலையைப் பற்றித் தெரியும். அக்பரின் பேகத்திற்கும் இது தெரியும். ஆனால், பேகம் அதைப்…

Read More

முட்டாள்களின் கேள்விகள்

முட்டாள்களின் கேள்விகள் பீர்பாலின் நகைச்சுவையான பேச்சுகளை அக்பர் மட்டுமன்றி தர்பாரில் பலரும் ரசித்தனர். ஆனால், சிலருக்கு மட்டும் பீர்பாலுக்குக் கிடைத்த பாராட்டுகள் பொறாமையை அளித்தன. ஒவ்வொரு முறையும் அக்பர் மனந்திறந்து பீர்பாலைப் பாராட்டுகையில், அவர்களுடைய மனம் பற்றியெரிந்தது. எப்படியாவது பீர்பாலை மட்டம் தட்ட வேண்டும் என்றும்,அவமானப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் ஆவலாயிருந்தனர். அவர்களில் சைதான்கான் முதன்மையானவர். சைதான்கான் தன்னைப்போலவே பீர்பாலின் மீது பொறாமை கொண்ட மற்றவர்களுடன் சேர்ந்து அவரை அவமானப்படுத்தத் திட்டங்கள் தீட்டினார். அவற்றுள் ஒரு திட்டம்…

Read More

செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள்

செப்புக் காசாக மாறிய தங்கக் காசுகள் சக்கரவர்த்தி அக்பர் பொது மக்களைத் தன் சபையில் நேரடியாக சந்தித்துக் குறைகளை விசாரிப்பார் என்ற செய்தி கேட்டு அந்தக் கிழவி பரபரப்படைந்தாள். சமூகத்தில் மிக செல்வாக்குடைய குல்ஷா என்ற பணக்கார பிரபுவின் முகத்திரையைக் கிழிக்க அவள் துடித்தாள். ஆனால், தான் அந்தப் பிரபுக்கெதிராக கூறப்போகும் புகாரை அக்பர் நம்புவாரா என்ற சந்தேகமும் ஏற்பட்டது. எதற்கும் அவரை சந்திப்பது என்ற முடிவுக்கு வந்தாள். மறுநாள் கிழவி தயங்காமல் தர்பாருக்கே சென்று விட்டாள்….

Read More

முத்திரை மோதிரத்தின் மகிமை

முத்திரை மோதிரத்தின் மகிமை அக்பரின் தர்பாரில் இருந்தவர்களில், பீர்பால் அக்பருக்கு மிகவும் நெருக்கமானவர். பீர்பாலுடைய அறிவும், நகைச்சுவையும் அக்பரைப் பெரிதும் கவர்ந்திருந்தன. பல சமயங்களில் தன்னுடைய நகைச்சுவைத் துணுக்குகளினால் அக்பரைக் குலுங்கக் குலுங்க சிரிக்க வைப்பதில் மிகவும் வல்லவர். வழக்கப்படி அவர் ஒருநாள் அக்பரை சிரிக்க வைத்தபோது, வாய்விட்டு சிரித்த அக்பர் பீர்பாலைப் பார்த்து, “நீ சக்திவாய்ந்தவனாக இருப்பதன் காரணம் உன் மதியூகமும், நகைச்சுவை உணர்வுமே!” என்று விமரிசித்தார். “பிரபு! அதுதான் உங்களுக்கும், எனக்குமுள்ள வித்தியாசம்! நீங்கள்…

Read More

அறிவுப் பானை

அறிவுப் பானை வீரசிம்மன் ஒரு குறுநல மன்னர்! சிற்றரசராக இருந்த அவர். அக்பருடைய ஆதிக்கத்தில் இருந்தார். முகலாய சாம்ராஜ்யத்திற்கு கப்பம் செலுத்தி, அவர்களுடன் நட்புறவோடிருந்தார். தனது ராஜ்யத்தில் குடிமக்களின் நிம்மதியையே பெரிதாக மதித்த வீரசிம்மன், முகலாயர்களின் அடிமையாக இருந்ததைப் பொருட்படுத்தவில்லை. ஆனால், அவருடைய ராஜ்யத்தில் இருந்த சில இளைஞர்கள் மன்னர் தன்மானத்தை அடகுவைத்து விட்டதாகக் கருதினர். அந்த இளைஞர்கள் தயக்கமின்றி அவரை அணுகி அவருடைய கொள்கைக்குத் தங்கள் கண்டனத்தைத் தெரிவித்தனர். சுதந்திரம் தங்களுடைய பிறப்புரிமை என்றும், நாட்டின்…

Read More