1. கண்ணன் – என் தோழன்
புன்னாகவராளி – திஸ்ரஜாதி ஏகதாளம் வத்ஸல ரசம் பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப் என்ன வழியென்று கேட்கில், உபாயம் ”கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக் உன்னை யடைந்தேன்” என்னில் உபாயம் |
1 |
கானகத்தே சுற்று நாளிலும் நெஞ்சிற்
சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில் ஊனை வருத்திடு நோய்வரும் போதினில் ஈனக் கவலைக ளெய்திடும் போதில் |
2 |
பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொரு
உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன் அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல் மழைக்குக் குடை, பசிநேரத் துணவென்றன் |
3 |
கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்
ஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும் நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்று கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்பு |
4 |
உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்
கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்கு பள்ளத்தி லேநெடு நாளழு குங்கெட்ட வெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லி |
5 |
சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்
வன்ன மகளிர் வசப்பட வேபல சொன்ன படிநட வாவிடி லோமிகத் தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின் |
6 |
கோபத்தி லேயொரு சொல்லிற் சிரித்துக்
தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சி ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்று தீபத்தி லேவிடும் பூச்சிகள் போல்வருந் |
7 |
உண்மை தவறி நடப்பவர் தம்மை
வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள் பெண்மைக் குணமுடை யான்; – சில நேரத்தில் தண்மைக் குணமுடை யான்; சில நேரம் |
8 |
கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்
சொல்லு மொழிகள் குழந்தைகள்; போலொரு நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாது அல்லவ ருக்கு விடத்தினில் நோயில் |
9 |
காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்
மோதும் படைத்தொழில் யாவினு மேதிறம் வேத முணர்ந்த முனிவ ருணர்வினில் கீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன் |
10 |
2. கண்ணன் – என் தாய்
(நொண்டிச் சிந்து)
உண்ண உண்ணத் தெவிட்டாதே – அம்மை
வண்ணமுற வைத்தெனக் கே – என்றன் கண்ணனெனும் பெயருடையாள், – என்னை மண்ணெனுந்தன் மடியில்வைத்தே – பல |
1 |
இன்பமெனச் சிலகதைகள் – எனக்
துன்பமெனச் சில கதைகள் – கெட்ட என்பருவம் என்றன் விருப்பம் – எனும் அன்பொடவள் சொல்லிவரு வாள்; – அதில் |
2 |
விந்தைவிந்தை யாக எனக்கே – பல
சந்திரனென் றொரு பொம்மை – அதில் மந்தை மந்தையா மேகம் – பல முந்தஒரு சூரியனுண்டு – அதன் |
3 |
வானத்து மீன்க ளுண்டு – சிறு
நானத்தைக் கணக்கிடவே – மனம் கானத்து மலைக ளுண்டு – எந்தக் மோனத்தி லேயிருக்கும் – ஒரு |
4 |
நல்லநல்ல நதிகளுண்டு – அவை
மெல்ல மெல்லப் போயவை தாம் – விழும் எல்லையதிற் காணுவ தில்லை; – அலை ஒல்லெனுமப் பாட்டினிலே – அம்மை |
5 |
சோலைகள் காவினங் கள் – அங்கு
சாலவும் இனியன வாய் – அங்கு ஞாலமுற்றிலும் நிறைந் தே – மிக கோலமுஞ் சுவையு முற – அவள் |
6 |
தின்றிடப் பண்டங்களும் – செவி
ஒன்றுறப் பழகுதற் கே – அறி கொன்றிடு மெனஇனி தாய் – இன்பக் நன்றியல் காதலுக் கே – இந்த |
7 |
இறகுடைப் பறவைக ளும் – நிலந்
அறைகடல் நிறைந்திட வே – எண்ணில் சுறவுகள் மீன்வகை கள் – எனத் நிறைவுற இன்பம்வைத் தாள்; – அதை |
8 |
சாத்திரம் கோடி வைத்தாள்; – அவை
மீத்திடும் பொழுதினி லே – நான் கோத்தபொய் வேதங்களும் – மதக் மூத்தவர் பொய்ந்நடை யும் – இள |
9 |
வேண்டிய கொடுத்திடு வாள்; – அவை
ஆண்டருள் புரிந்திடு வாள்; – அண்ணன் யாண்டுமெக் காலத்தி னும் – அவள் நீண்டதொர் புகழ்வாழ் வும் – பிற |
10 |
3. கண்ணன் – என் தந்தை
(நொண்டிச் சிந்து)
ப்ரதான ரஸம் – அற்புதம்
பூமிக் கெனைய னுப்பி னான்; – அந்தப் நேமித்த நெறிப்படி யே – இந்த போமித் தரைகளி லெல்லாம் – மனம் சாமி இவற்றினுக் கெல்லாம் – எங்க |
1 |
செல்வத்திற்கோர் குறையில்லை; – எந்தை
கல்வியில் மிகச் சிறந்தோன் – அவன் பல்வகை மாண்பி னிடையே – கொஞ்சம் நல்வழி செல்லு பவரை – மனம் |
2 |
நாவு துணிகுவ தில்லை – உண்மை
யாவருந் தெரிந்திடவே – எங்கள் மூவகைப் பெயர் புனைந்தே – அவன் தேவர் குலத்தவன் என்றே – அவன் |
3 |
பிறந்தது மறக் குலத்தில்; – அவன்
சிறந்தது பார்ப்பன ருள்ளே; – சில நிறந்தனிற் கருமை கொண்டான்; – அவன் துறந்த நடைக ளுடையான்; – உங்கள் |
4 |
ஏழைகளைத் தோழமை கொள்வான்; – செல்வம்
தாழவருந் துன்ப மதிலும் – நெஞ்சத் நாழிகைக்கொர் புத்தி யுடையான்; – ஒரு பாழிடத்தை நாடி யிருப்பான்; – பல |
5 |
இன்பத்தை இனிதெனவும் – துன்பம்
அன்பு மிகவு முடையான்; – தெளிந் வன்புகள் பல புரிவான்; – ஒரு முன்பு விதித்த தனையே – பின்பு |
6 |
வேதங்கள் கோத்து வைத்தான் – அந்த
வேதங்க ளென்று புவியோர் – சொல்லும் வேதங்க ளென்றவற் றுள்ளே – அவன் வேதங்க ளன்றி யொன்றில்லை – இந்த |
7 |
நாலு குலங்கள் அமைத்தான்; – அதை
சீலம் அறிவு கருமம் – இவை மேலவர் கீழவ ரென்றே – வெறும் போலிச் சுவடியை யெல்லாம் – இன்று |
8 |
வயது முதிர்ந்து விடினும் – எந்தை
துயரில்லை; மூப்பு மில்லை, – என்றும் பயமில்லை, பரிவொன்றில்லை, – எவர் நயமிகத் தெரிந்தவன் காண்; – தனி |
9 |
துன்பத்தில் நொந்து வருவோர் – தம்மைத்
அன்பினைக் கைக்கொள் என்பான்; – துன்பம் என்புடை பட்ட பொழுதும் – நெஞ்சில் இன்பத்தை எண்ணு பவர்க்கே – என்றும் |
10 |
4. கண்ணன் என் – சேவகன்
கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்: வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; ‘ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை’ யென்றால் பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்; வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்; |
5 |
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்; ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்; தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்; உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்; என்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்; |
10 |
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்; சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லை. இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்; எங்கிருந்தோ வந்தான், ‘இடைச்சாதி நான்’ என்றான்; ”மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன் |
15 |
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்; சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்; சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்; காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்; |
20 |
இரவிற் பகலிலே எந்நேர மானாலும் சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்; கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே! ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர் |
25 |
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்” என்றுபல சொல்லி நின்றான் ”ஏது பெயர்? சொல்” என்றேன் ”ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை” என்றான். கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம் ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்; |
30 |
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன், ”மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்; கூலியென்ன கேட்கின்றாய்? கூறு” கென்றேன். ”ஐயனே! தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை; நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் |
35 |
ஆன வயதிற் களவில்லை; தேவரீர் ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை” யென்றான். பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே கண்டு மிகவும் களிப்புடனே நானவனை . |
40 |
ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டு, நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப் பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம் |
45 |
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன் வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்; தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்; மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய் ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் |
50 |
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப் பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய், பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான். |
55 |
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய் எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச் செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி, கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம், |
60 |
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும் ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்! கண்ணனைநான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொ ண்டேன்! கண்ணனை யாட்கொள்ளக் காரணமும் உள்ளனவே! |
5. கண்ணன் என் அரசன்
பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்
நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோ |
1 |
கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்
எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம் |
2 |
படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்
‘இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்’ |
3 |
கொல்லப் பூத மனுப்பிடு மாமனே
முல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும் |
4 |
வான நீர்க்கு வருந்தும் பயிரென
தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள் |
5 |
காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்
நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்; |
6 |
நாம வன்வலி நம்பியி ருக்கவும்,
தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்; |
7 |
தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;
மந்தி ரத்திற னும்பல காட்டுவான்; |
8 |
காலம் வந்துகை கூடுமப் போதிலோர்
ஆல கால விடத்தினைப் போலவே, |
9 |
வேரும் வேரடி மண்ணு மிலாமலே
பாரும் வானமும் ஆயிர மாண்டுகள் |
10 |
சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;
இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ ? |
11 |
கண்ண னெங்கள் அரசன் புகழினைக்
திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத் |
12 |
நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்;
வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளே |
13 |
கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!
அண்ண லின்னருள் வாடி ய நாடுதான் |
14 |
6. கண்ணன் என் சீடன்
(ஆசிரியப்பா)
யானே யாகி என்னலாற் பிறவாய் யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய் யாதோ பொருளாம் மாயக் கண்ணன், என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும், என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால் |
5 |
என்னடை பழகலால் என்மொழி கேட்டலால் மேம்பா டெய்த வேண்டினோன் போலவும், யான்சொலுங் கவிதை என்மதி யளவை இவற்றினைப் பெருமை யிலங்கின வென்று கருதுவான் போலவும், கண்ணக் கள்வன். |
10 |
சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே! பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்து பட்டன தொல்லை பலபெரும் பாரதம்; உளத்தினை வென்றிடேன்; உலகினை வெல்லவும், தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் |
15 |
சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும், தன்னுள்ளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும் உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ள மாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றி இன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் |
20 |
தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு, மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து, புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும், பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்; வெறும்வாய் மெல்லுங் கிழவிக் கிஃதோர் |
25 |
அவலாய்மூண்டது; யானுமங் கவனை உயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய், ”இன்னது செய்திடேல், இவரோடு பழகேல், இவ்வகை மொழிந்திடேல் இனையன விரும்பேல், இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், |
30 |
இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்” எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி, ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன். கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம் எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் |
35 |
நெறியினக் கெல்லாம் நேரெதிர் நெறியே நடப்பா னாயினன். நானிலத் தவர்தம் மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும் தெய்வமாக் கொண்ட சிறுமதி யுடையேன், கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் |
40 |
விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும், உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும் தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும் இகழுமிக் கவனாய் என்மனம் வருந்த நடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் |
45 |
கண்ணனும் தனது கழிபடு நடையில் மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர் கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனை இகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும் நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் |
50 |
தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாது. முத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன் பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென் நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும் தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் |
55 |
சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன். தேவ நிலையிலே சேர்த்திடா விடினும், மானுடந் தவறி மடிவுறா வண்ணம், கண்ணனை நானும் காத்திட விரும்பித் தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும், |
60 |
சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும், கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும் எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக் கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலை. கண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, |
65 |
எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய், எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய், குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய் யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான். இதனால், |
70 |
அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற; யான்கடுஞ் சினமுற்று ‘எவ்வகை யானும் கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்’ எனப்பெருந் தாபம் எய்தினே னாகி, ‘எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் |
75 |
ஓரிடந் தன்னில் ஒருவழி வலிய நிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்’ என்றுளத் தெண்ணி இசைந்திடு ஞ் சமயங் காத்திருந் திட்டேன். ஒருநாள் கண்ணனைத் தனியே எனது வீட்டினிற் கொண்டு, |
80 |
”மகனே, என்பால் வரம்பிலா நேசமும் அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி, நின்னிட மொன்று கேட்பேன்; நீயது செய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியே மாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். |
85 |
சாத்திர நாட்டமும், தருக்கமும் கவிதையில் மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும் கொண்டோ ர் தமையே அருகினிற் கொண்டு பொருளினுக் கலையும் நேரம் போக மிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி |
90 |
இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்; பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும் அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன். ஆதலால், என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் |
95 |
என்னுடன் சிலநாள் இருந்திட நின்னை வேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தே என்னைநீ துன்பம் எய்துவித் திடாமே, இவ்வுரைக் கிணங்குவாய்” என்றேன். கண்ணனும், ”அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே |
100 |
தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது? காரிய மொன்று காட்டுவை யாயின், இருப்பேன்” என்றான். இவனுடைய இயல்பையும் திறனையுங் கருதி, ”என் செய்யுளை யெல்லாம் நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் |
105 |
கொடுத்திடுந் தொழிலினைக் கொள்ளுதி” என்றேன் நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்; ‘செல்வேன்’ என்றான்; சினத்தொடு நானும் பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன் கையினிற் கொடுத்துக் ”கவினுற இதனை . |
110 |
எழுதுக” என்றேன்; இணங்குவான் போன்றதைக் கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான், ”செல்வேன்” என்றான். சினந்தீ யாகிநான் ”ஏதடா, சொன்ன சொல் அழித்துரைக் கின்றாய்; பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது |
115 |
பிழையிலை போலும்” என்றேன். அதற்கு,. ”நாளவந் திவ்வினை நடத்துவேன்” என்றான். ”இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச் செய்கின் றனையா? செய்குவ தில்லையா? ஓருரை சொல்” என்றுமினேன். கண்ணனும் |
120 |
”இல்லை” யென் றொருசொல் இமைக்கு முன் கூறினான். வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக் கண்விசந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான் ”சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும் இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே. |
125 |
என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீ போந்திடல் வேண்டா, போ, போ, போ” என்று இடியுறச் சொன்னேன்; கண்ணனும் எழுந்து செல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திட ”மகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் |
130 |
தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மை செய்திடக் கருதி ஏதேதோ செய்தேன். தோற்றுவிட்டேனடா! சூழ்ச்சிகள் அறிந்தேன். மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!” எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். |
135 |
சென்றனன் கண்ணன். திரும்பியோர் கணத்தே எங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்; காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான். ”ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன். தொழில்பல புரிவேன், துன்பமிங் கென்றும், |
140 |
இனிநினக் கென்னால் எய்திடா” தெனப்பல நல்லசொல் லுரைத்து நகைத்தனன் மறைந்தான். மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன் நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்: ”மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் |
145 |
அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்; தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலே வென்றாய்; உலகினில் வேண்டிய தொழிலெல்லாம் ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்து வாழ்க நீ” என்றான். வாழ்கமற் றவனே! |
150 |