சர் பிலிப் சிட்னி என்பவர் ஆங்கில அரசின் தளபதி சிறந்த கவிஞரான இவர் நல்லவர். சேவையில் ஆர்வமுள்ளவர். ஒர் முக்கியமான போர் ஒன்றில் சிட்னி கலந்து கொள்ள நேரிட்டது. வீரர்கள் பலரும் குண்டடிபட்டு இறந்தனர் சிட்னியும் பலத்த அடிபட்டதால் இறக்கும் நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு மிகவும் தாகமெடுத்தது தண்ணீர் தண்ணீர் என தீனமான குரலில் வேண்டினார். ஒருவர் அவசரமாக அவருக்கு தண்ணீர் கொண்டு வந்தார் அதை வாங்கிக் குடிக்கப்போகும் போது அருகில் மற்றொரு வீரன் தீனக் குரலில் நீர் வேண்டியது சிட்னிக்குக் கேட்டது.
உடனே சிட்னி சிறிதும் தயக்கமின்றி அவரிடம் உன் தேவை என் தேவையைவிட முக்கியமானது என்று கூறி நீரை அந்த வீரனுக்கு வழங்கினார். இதனால் அந்த வீரன் உயிர் பெற்றான் ஆனால் நீரைத்தானமாக வழங்கியவர் அமரரானார். உயிர் பிரியும் நேரத்திலும் ஓர் உயிரைக் காத்த நற்காரியம் செய்ததற்கு என்ன காரணமாக இருந்திருக்க முடியும் ? அவரிடம் மிளிர்த்த அன்பு தான் காரணம் அதுவரை சாதாரணப் புகழில் இருந்த சிட்னி இதன் பின் நிலைத்த புகழ் பெற்றார் அரசு சிட்னிக்கு சர்பட்டம் வழங்கி கௌரவித்தது.