பிறந்த ஊர்: தேரழுந்தூர், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ளது (சோழநாட்டுத் திருவெழுந்தூர்)
இறந்த ஊர்: பாண்டி நாட்டு நாட்டரசன்கோட்டை
தந்தை: ஆதித்தன்
போற்றிவர்: திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்ப வள்ளல்
காலம்: 12 ஆம் நூற்றாண்டு
பொயர்கள் : சயங்கொண்டார், ஒட்ட்க்கூத்தர், புகழேந்தி புலவர் ஆகியோர் கம்பர் காலத்துப் புலவர்கள்.
பாடல்கள் :கம்பர் 1௦௦௦ பாடலுக்கு ஒருமுறை சடையப்ப வள்ளலைப் பாடியுள்ளார்.
நூல்கள்: ஏர் எழுபது, திருக்கை வழக்கம்(இரண்டும் உழவு பற்றியது), கம்பராமாயணம், சடகோபர் அந்தாதி, சரசுவதி அந்தாதி
மகன் ; கம்பர் மகன் அம்பிகாபதி
நூல் : அம்பிகாபதி எழுதியது அம்பிகபதிக்கோவை
சிறப்பு: கம்பன்வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும், கல்வியில் பெரியர் கம்பர், வெண்பா பாடுவதில் வல்லவர், விருதப்பா பாடுவதில் வல்லவர்.
புகழுரைகள்: “கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்”
“கம்பனைப் போல் வள்ளுவனைப் போல்
இலங்கோவடிகள் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை”
“யாமறிந்த புலவரிலே” -பாரதி
உழவின் சிறப்பு
மேழி- கலப்பை, ஏர்; வேந்தர்- மன்னர்; ஆழி- மோதிரம்; சூழ்வினை-உண்டாகும் வறுமைத் துன்பம்; காராளர்- மேகத்தை ஆளுகின்றவர்களாகிய உழவர்.
கம்பராமாயணம்”தாதுகு சோலை தோறும் சன்பகக் காடு தோறும் போதவிழ் பொய்கை தோறும் புதுமணல் தடங்கள் தோறும் மாதவி வேலிப் பூக வனந்தோறும் வயல்கள் தோறும் ஓதிய உடம்பு தோறும் உயிரென உலாய தன்றே”
தாதுகு- மகரந்தம், போது- மலர், பொய்கை- குளம், பூகம்- கமுகம்(பாக்கு மரம்)
“உலகம் யாவையும் தாமுளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டுடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே”
உலவாக்கல்- உண்டாகுதல்( படைத்தல்); நிலைபெருத்தல்- காத்தல்; நீக்கல்-அழித்தல்; நீங்கலா- இடைவிடாது; அகிலா- அளவற்ற; அன்னவர்- அத்தகைய இறைவன்; தலைவன்- இறைவன்; சரண்- அடைக்கலம்
* கம்பர் தான் இயற்றிய நூலுக்கு இட்ட பெயர் “இராமாவதாரம்”. வழிநூல் என்றும் கூறுவர்.
காண்டங்கள்
* பாலகாண்டம்
* அயோத்தியா காண்டம்
* ஆரணிய காண்டம்
* கிட்கிந்தா காண்டம்
* சுந்தர காண்டம்
* யுத்த கண்டாம்
காண்டம்- பெரும் பிரிவு, படலம்- உட்பிரிவு