1.அச்சமில்லை
| அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே துச்சமாக எண்ணி நம்மைச் தூறுசெய்த போதினும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்று விட்ட போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சைகொண்டே பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே |
1 |
| கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே நச்சைவாயி லே கொணர்ந்து நண்ப ரூட்டு போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே பச்சையூ னியைந்த வேற் படைகள் வந்த போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே. |
2 |
| ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா! சரணங்கள்
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; |
| விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச் சிட்டுக் குருவியைப் போலே சரணங்கள்
1. எட்டுத் திசையும் பறந்து திரிகுவை |
| ராகம் – நாட்டை
பல்லவி
வேண்டுமடி எப்போதும் விடுதலை,அம்மா; சரணங்கள்
1. தூண்டு மின்ப வாடை வீசு துய்ய தேன் கடல் |
| மனதி லுறுதி வேண்டும்,வாக்கினி லேயினிமை வேண்டும்; நினைவு நல்லது வேண்டும்,நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்; கனவு மெய்ப்பட வேண்டும்,கைவசமாவது விரைவில் வேண்டும்; தனமும் இன்பமும் வேண்டும்,தரணியிலே பெருமை வேண்டும். கண் திறந்திட வேண்டும்,காரியத்தி லுறுதி வேண்டும்; பெண் விடுதலை வேண்டும்,பெரிய கடவுள் காக்க வேண்டும், மண் பயனுற வேண்டும்,வானகமிங்கு தென்பட வேண்டும்; உண்மை நின்றிட வேண்டும்.ஓம் ஓம் ஓம் ஓம். |
| கண்ணில் தெரியும் பொருளினைக் கைகள்கவர்ந்திட மாட்டாவோ?-அட மண்ணில் தெரியுது வானம்,அதுநம்வசப்பட லாகாதோ? எண்ணி யெண்ணிப்பல நாளு முயன்றிங்கிறுதியிற் சோர்வோமோ?-அட, விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்மேவு ப்ராசக்தியே! |
1 |
| என்ன வரங்கள்,பெருமைகள்,வெற்றிகள்,எத்தனை மேன்மைகளோ! தன்னை வென்றாலவை யாவும் பெறுவதுசத்திய மாகுமென்றே முன்னை முனிவர் உரைத்த மறைப் பொருள்முற்றுமுணர்ந்த பின்னும் தன்னை வென்றாளும் திறமை பெறாதிங்குதாழ்வுற்று நிற்போமோ? |
2 |
| ராகம்-சக்கரவாகம் தாளம்-ஆதி பல்லவி
காலா!உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்;என்றன் சரணங்கள்
1. வேலாயுத விருதினை மனதிற் மதிக்கிறேன்;என்றன் வேதாந்த முரைத்த ஞானியர் தமை யெண்ணித்[துதிக்கிறேன்-ஆதி |
| ராகம்-காம்போதி தாளம்-ஆதிஉண்மை யறிந்தவர் உன்னைக் கணிப்பாரோ? மாயையே-மனத் |
1 |
| எத்தனை கோடி படைகொண்டு வந்தாலும்மாயையே-நீ சித்தத் தெளிவெனுந் தீயின்முன்நிற்பாயோ?-மாயையே! |
2 |
| என்னைக் கெடுப்பதற் கெண்ணமுற்றாய்கெட்ட மாயையே!-நான் உன்னைக் கெடுப்ப துறுதியென்றேயுணர்-மாயையே! |
3 |
| சாகத் துணியிற் சமுத்திர மெம்மட்டுமாயையே!-இந்தத் தேகம் பொய் யென்றுணார் தீரரை யென்செய்வாய்!-மாயையே! |
4 |
| இருமை யழிந்தபின் எங்கிருப்பாய்,அற்பமாயையே!-தெளிந் தொருமை கண்டார் முன்னம் ஓடாதுநிற்பையோ?-மாயையே! |
5 |
| நீதரும் இன்பத்தை நேரென்று கொள்வனோமாயையே-சிங்கம் நாய்தரக் கொள்ளுமோ நல்லரசாட்சியை-மாயையே! |
6 |
| என்னிச்சை கொண்டுனை யெற்றி விட வல்லேன் மாயையே!-இனி உன்னிச்சை கொண்டெனக் கொன்றும் வராது காண்-மாயையே! |
7 |
| யார்க்கும் குடியல்லேன் யானென்பதோர்ந்தனன் மாயையே!-உன்றன் போர்க்கஞ்சு வேனோ பொடியாக்குவேன்உன்னை-மாயையே! |
8 |
| செத்தபிறகு சிவலோகம் வைகுந்தம்சேர்ந்திடலா மென்றே எண்ணியிருப்பார் பித்த மனிதர்,அவர் சொலுஞ் சாத்திரம்பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்! |
1 |
| இத்தரை மீதினி லேயிந்த நாளினில்இப்பொழு தேமுக்தி சேர்ந்திட நாடிச் சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்தூய ராமென்றிங் கூதேடா சங்கம்! |
2 |
| பொய்யுறு மாயையைப் பொய்யெனக் கொண்டு,புலன்களை வெட்டிப் புறத்தில் எறிந்தே ஐயுற லின்றிக் களித்டிருப் பாரவர்ஆரிய ராமென்றிங் கூதேடா சங்கம்! |
3 |
| மையுறு வாள்விழி யாரையும் பொன்னையும்மண்ணெனக் கொண்டு மயக்கற் றிருந்தாரே செய்யுறு காரியம் தாமன்றிச் செய்வார்சித்தர்க் ளாமென்றிங் கூதேடா சங்கம்! |
4 |
| ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடிஅலையும் அறிவிலிகாள்!-பல் லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாமெனல் கேளீரோ? |
1 |
| மாடனைக் காடனை வேடனைப் போற்றிமயங்கும் மதியிலிகாள்!-எத னூடும்நின் றோங்கும் அறிவென்றே தெய்வமென்றோதி யறியிரோ? |
2 |
| சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்சுருதிகள் கேளீரோ?-பல பித்த மதங்களி லேதடு மாறிப்பெருமை யழிவீரோ? |
3 |
| வேடம்பல் கோடியொர் உண்மைக் குளவென்றுவேதம் புகன்றிடுமே-ஆங்கோர் வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்வேத மறியாதே. |
4 |
| நாமம்பல் கோடியொர் உண்மைக் குளவென்றுநான்மறை கூறிடுமே-ஆங்கோர் நாமத்தை நீருண்மை யென்று கொள் வீரென்றந்நான்மறை கண்டிலதே. |
5 |
| போந்த நிலைகள் பலவும் பராசக்திபூணு நிலையாமே-உப சாந்த நிலையே வேதாந்த நிலையென்றுசான்றவர் கண்டனரே. |
6 |
| கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்றுகாட்டும் மறைகளெலாம்-நீவிர் அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்குஅவங்கள் புரிவீரோ? |
7 |
| உள்ள தனைத்திலும் உள்ளொளி யாகிஒளிர்ந்திடும் ஆன்மாவே-இங்கு, கொள்ளற் கரிய பிரமமென் றேமறைகூவுதல் கேளீரோ? |
8 |
| மெள்ளப் பலதெய்வம் கூட்டி வளர்த்துவெறுங் கதைகள் சேர்த்துப்-பல கள்ள மதங்கள் பரப்புதற் கோர்மறைகாட்டவும் வல்லீரோ? |
9 |
| ஒன்று பிரம முளதுண்மை யஃதுன்உணர்வெனும் வேதமெலாம்-என்றும் ஒன்ரு பிரம முள துண்மை யஃதுன்உணர்வெனக் கொள்வாயே. |
10 |
| உள்ளும் புறமுமாய் உள்ள தெலாந் தானாகும்வெள்ளமொன்றுண் டாமதனைத் தெய்வமென்பார்[வேதியரே. | 1 |
| காணுவன நெஞ்சிற் கருதுவன உட்கருத்தைப்பேணுவன யாவும் பிறப்பதந்த வெள்ளத்தே. | 2 |
| எல்லை பிரி வற்றதுவாய் யாதெனுமோர் பற்றிலதாய்இல்லையுள தென்றறிஞர் என்றுமய லெய்துவதாய் | 3 |
| வெட்டவெளி யாயறிவாய் வேறுபல சக்திகளைக்கொட்டுமுகி லாயணுக்கள் கூட்டிப் பிரிப்பதுவாய். | 4 |
| தூல வணுக்களாய்ச் சூக்குமமாய்ச் சூக்குமத்திற்சாலவுமே நுண்ணியதாய்த் தன்மையெலாந் தானாகி, | 5 |
| தன்மையொன் றிலாததுவாய்த் தானே ஒரு பொருளாய்த்தன்மைபல வுடைத்தாய்த் தான்பலவாய் நிற்பதுவே. | 6 |
| எங்குமுளான் யாவும் வலான் யாவுமறி வானெனவே தங்குபல மதத்தோர் சாற்றுவதும் இங்கிதையே. |
7 |
| வேண்டுவோர் வேட்கையாய் வேட்பாராய் வேட்பாருக் கீண்டுபொரு ளாயதனை யீட்டுவதாய் நிற்குமிதே. |
8 |
| காண்பார்தங் காட்சியாய்க் காண்பாராய்க் காண்பொரு[ளாய் மாண்பார்ந் திருக்கும்,வகுத்துரைக்க வொண்ணாதே. |
9 |
| எல்லாந் தானாகி யிரிந்திடினும் இஃதறிய வல்லார் சிலரென்பர் வாய்மையெல்லாங் கண்டவரே. |
10 |
| மற்றிதனைக் கண்டார் மலமற்றார் துன்பமற்றார்; பற்றிதனைக் கொண்டார் பயனைத்துங் கண்டாரே. |
11 |
| இப்பொருளைக் கண்டார் இடருக்கோர் எல்லைகண்டார்; எப்பொருளுந் தாம்பெற்றிங் கின்பநிலை யெய்துவரே. |
12 |
| வேண்டுவ வெலாம் பெறுவார் வேண்டா ரெதனையுமற் றீண்டுபுவி யோரவரை யீசரெனப் போற்றுவரே. |
13 |
| ஒன்றுமே வேண்டா துலகனைத்தும் ஆளுவர்காண்; என்றுமே யிப்பொருளோ டேகாந்தத் துள்ளவரே. |
14 |
| வெள்ளமடா தம்பி விரும்பியபோ தெய்திநின துள்ள மிசைத் தானமுத வூற்றாய்ப் பொழியுமடா! |
15 |
| யாண்டுமிந்த இன்பவெள்ளம் என்றுநின்னுள் வீழ்வதற்கே வேண்டு முபாயம் மிகவுமெளி தாகுமடா! |
16 |
| எண்ணமிட்ட லேபோதும் எண்ணுவதே இவ்வின்பத் தண்ணமுதை யுள்ளே ததும்பப் புரியுமடா! |
17 |
| எங்கு நிறைந்திருந்த ஈசவெள்ள மென்னகத்தே பொங்குகின்ற தென்றெண்ணிப் போற்றி நின்றாற்[போதுமடா! |
18 |
| யாதுமாம் ஈசவெள்ளம் என்னுள் நிரம்பியதென் றோதுவதே போதுமதை உள்ளுவதே போதுமடா! |
19 |
| காவித் துணிவேண்டா,காற்றைச் சடைவேண்டா பாவித்தல் போதும் பரமநிலை யெய்துதற்கே |
20 |
| சாத்திரங்கள் வேண்டா சதுமறைக ளேதுமில்லை; தோத்திரங்க ளில்லையுளந் தொட்டுநின்றாற் போதுமடா! |
21 |
| தவமொன்று மில்லையொரு சாதனையு மில்லையடா! சிவமொன்றே யுள்ளதெனச் சிந்தைசெய்தாற்போதுமடா! |
22 |
| சந்ததமு மெங்குமெல்லாந் தானாகி நின்றசிவம் வந்தெனுளே பாயுதென்று வாய்சொன்னாற் போதுமடா! |
23 |
| நித்தசிவ வெள்ள மென்னுள் வீழ்ந்து நிரம்புதென்றுன் சித்தமிசைக் கொள்ளுஞ்சிரத்தை யொன்றே போதுமடா! |
24 |
| நிற்பதுவே,நடப்பதுவே,பறப்பதுவே,நீங்க ளெல்லாம் சொற்பனந் தானா?பல தோற்ற மயக்கங்களோ? கற்பதுவே!கேட்பதுவே,கருதுவதே நீங்க ளெல்லாம் அற்ப மாயைகளோ?உம்முள் ஆழ்ந்த பொருளில்லையோ? |
1 |
| வானகமே,இளவெயிலே,மரச்செறிவே நீங்க ளெல்லாம் கானலின் நீரோ?-வெறுங் காட்சிப் பிழைதானோ? போனதெல்லாம் கனவினைப்போற் புதைந்தழிந்தே[போனதனால் நானுமோர் கனவோ?-இந்த ஞாலமும் பொய்தானோ? |
2 |
| கால மென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பலநினைவும் கோலமும் பொய்களோ?அங்குக் குணங்களும் பொய்களோ? சோலையிலே மரங்க ளெல்லாம் தோன்றுவதோர்[விதையிலென்றால், சோலை பொய்யாமோ?-இதைச் சொல்லொடுசேர்ப்பாரோ? |
3 |
| காண்பவெல்லாம் மறையுமென்றால் மறைந்ததெல்லாம்(காண்ப மென்றோ? வீண்படு பொய்யிலே-நித்தம் விதிதொடர்ந் திடுமோ? காண்பதுவே உறுதிகண்டோ ம் காண்பதல்லால் உறுதியில்லை காண்பது சக்தியாம்-இந்தக் காட்சி நித்தியமாம். |
4 |
| வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்;மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்; கானிழல் வளரும் மரமெலாம் நான்,காற்றும் புனலும் கடலுமே நான். |
1 |
| விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்வெட்ட வெளியின் விரிவெலாம் நான், மண்ணில் கிடக்கும் புழுவெலாம் நான்,வாரியிலுள்ள உயிரெலாம் நான். |
2 |
| கம்பனிசைத்த கவியெலாம் நான்,காருகர் தீட்டும் உருவெலாம் நான்; இம்பர் வியக்கின்ற மாட கூடம்எழில் நகர் கோபுரம் யாவுமே நான். |
3 |
| இன்னிசை மாத ரிசையுளேன் நான்;இன்பத் திரள்கள் அனைத்துமே நான்; புன்னிலை மாந்தர் தம் பொய்யெலாம் நான்;பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். |
4 |
| மந்திரங் கோடி இயக்குவோன் நான்,இயங்கு பொருளின் இயல்பெலாம் நான், தந்திரங் கோடி சமைத்துளோன் நான்,சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். |
5 |
| அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,அவை பிழையாமே சுழற்றுவோன் நான்; கண்டநற் சக்திக் கணமெலாம் நான்,காரண மாகிக் கதித்துளோன் நான். |
6 |
| நானெனும் பொய்யை நடத்துவோன் நான்;ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான் ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்அறிவாய் விளங்குமுதற சோதிநான்! |
7 |
| சித்தாந்தச் சாமி திருக்கோயில் வாயிலில்தீபவொளி யுண்டாம்;-பெண்ணே! முத்தாந்த வீதி முழுதையுங் காட்டிடமூண்டதிருச் சுடராம்;-பெண்ணே! |
1 |
| உள்ளத் தழுக்கும் உடலிற் குறைகளும்ஒட்டவருஞ் சுடராம்;-பெண்ணே! கள்ளத் தனங்கள் அனைத்தும் வெளிப்படக்காட்ட வருஞ் சுடராம்;-பெண்ணே! |
2 |
| தோன்று முயிர்கள் அனைத்டும்நன் றென்பதுதோற்ற முறுஞ் சுடராம்;-பெண்ணே! மூன்று வகைப்படும் காலநன் றென்பதைமுன்ன ரிடுஞ் சுடராம்;-பெண்ணே! |
3 |
| பட்டினந் தன்னிலும் பாக்கநன் றென்பதைப்பார்க்க வொளிர்ச்சுடராம்-பெண்ணே! கட்டு மனையிலுங் கோயில்நன் றென்பதைக்காண வொளிர்ச் சுடராம்;-பெண்ணே! |
4 |
| ராகம்-பிலஹரி
பல்லவி
பக்தியினாலெ-தெய்வ-பக்தியினாலே சரணங்கள்
1. பக்தியினாலே-இந்தப் பாரினி லெய்திடும் மேன்மைகள் கேளடீ! கால்கொண் டடித்து விழுந்திடலாகும்;இத் அச்சத்தைக் கொன்று பொசுக்கிடுவோம்,கெட்ட சுகத்தினைத் தள்ளிச் சுகம்பெறலாகும்,நற் காரியங் கையுறும்,வீரிய மோங்கிடும், சொன்ன படிக்கு நடக்கும்,முடி சற்றுங் சஞ்சலங் கெட்டு வலிமைகள் சேர்ந்திடும், |
| 1. ”பூட்டைத் திறப்பது கையாலே-நல்லமனந் திறப்பது மதியாலே” பாட்டைத் திறப்பது பண்ணாலே-இன்பவீட்டைத் திறப்பது பெண்ணாலே.2. ஏட்டைத் துடைப்பது கையாலே-மன வீட்டைத் துடைப்பது மெய்யாலே; காயத்தைக் காப்பது செய்கையாலே, |
| ”காட்டு வழிதனிலே-அண்ணே!கள்ளர் பயமிருந்தால்?”எங்கள் வீட்டுக் குலதெய்வம்-தம்பிவீரம்மை காக்குமடா!” |
1 |
| ”நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்நெருங்கிக் கேட்கையிலே”-”எங்கள் கறுத்த மாரியின் பேர்-சொன்னால்காலனும் அஞ்சுமடா!” |
2 |
| கடமை புரிவா ரின்புறுவார்என்னும் பண்டைக் கதை பேணோம்; கடமை யறிவோம் தொழிலறியோம்;கட்டென் பதனை வெட்டென் போம்; மடமை,சிறுமை,துன்பம்,பொய்,வருத்தம்,நோவு,மற்றிவை போல் கடமை நினைவுந் தொலைத் திங்குகளியுற் றென்றும் வாழ்குவமே. |
| இந்தப் புவிதனில் வாழும் மரங்களும் இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும் அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும் ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும் எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ? |
1 |
|
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும் வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும் |
2 |
| சென்றதினி மீளாது மூடரே!நீர்எப்போதும் சென்றதையே சிந்தை செய்து கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்துகுமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம். இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்எண்ண மதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா. |
| பேயா யுழலுஞ் சிறுமனமே!பேணா யென்சொல் இன்றுமுதல் நீயா யொன்றும் நாடாதேநினது தலைவன் யானேகாண்; தாயாம் சக்தி தாளினிலும்தரும மெனயான் குறிப்பதிலும் ஓயா தேநின் றுழைத்திடுவாய்உரைத்தேன் அடங்கி உய்யுதியால். பா.-13 |
| மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டுவி டென்றதை விடாதுபோய் விழுவாய் |
5 |
| தொட்டதை மீள மீளவுந் தொடுவாய் புதியது காணிற் புலனழிந் திடுவாய் புதியது விரும்புவாய்,புதியதை அஞ்சுவாய் அடிக்கடி மதுவினை அணுகிடும் வண்டுபோல் பழமையாம் பொருளிற் பரிந்துபோய் வீழ்வாய் |
10 |
| பழமையே யன்றிப் பார்மிசை யேதும் புதுமை காணோமெனப் பொருமுவாய்,சீச்சீ! பிணத்தினை விரும்புங் காக்கையே போல அழுகுதல்,சாதல்,அஞ்சுதல் முதலிய இழிபொருள் காணில் விரைந்ததில் இசைவாய். |
15 |
| அங்ஙனே, என்னிடத் தென்று மாறுத லில்லா அன்புகொண் டிருப்பாய்,ஆவிகாத் திடுவாய், கண்ணினோர் கண்ணாய்,காதின் காதாய்ப் புலன்புலப் படுத்தும் புலனா யென்னை |
20 |
| உலக வுருளையில் ஓட்டுற வகுப்பாய், இன்பெலாந் தருவாய்,இன்பத்து மய்ங்குவாய், இன்பமே நாடி யெண்ணிலாப் பிழை செய்வாய், இன்பங் காத்துத் துன்பமே யழிப்பாய் இன்பமென் றெண்ணித் துன்பத்து வீழ்வாய், |
25 |
| தன்னை யறியாய்,சகத்தெலாந் தொளைப்பாய், தன்பின் னிற்குந் தனிப்பரம் பொருளைக் காணவே வருந்துவாய்,காணெனிற் காணாய், சகத்தின் விதிகளைத் தனித்தனி அறிவாய், பொதுநிலை அறியாய்,பொருளையுங் காணாய் |
30 |
| மனமெனும் பெண்ணே!வாழிநீ கேளாய்! நின்னொடு வாழும் நெறியுநன் கறிந்திடேன்; இத்தனை நாட்போல் இனியுநின் னின்பமே விரும்புவன்;நின்னை மேம்படுத் திடவே முயற்சிகள் புரிவேன்;முத்தியுந் தேடுவேன்; |
35 |
| உன்விழிப் படாமல் என்விழிப் பட்ட சிவமெனும் பொருளைத் தினமும் போற்றி உன்றனக் கின்பம் ஓங்கிடச் செய்வேன். |
| பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே! பகைவனுக் கருள்வாய்!1. புகை நடுவினில் தீயிருப்பதைப் பூமியிற் கண்டோ மே-நன்னெஞ்சே!பூமியிற் கண்டோ மே. 2. சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ் செய்தி யறியாயோ?-நன்னெஞ்சே! உள்ளம் நிறைவாமோ,-நன்னெஞ்சே! வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே! போலவந் தானுமவன்-நன்னெஞ்சே! சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே! |
| எல்லா மகிக் கலந்து நிறைந்தபின்ஏழைமை யுண்டோ டா?-மனமே! பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த்பின்புத்தி மயக்க முண்டோ ? |
1 |
| உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின்உள்ளங் குலைவதுண்டோ -மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின்வேதனை யுண் டோ டா? |
2 |
| சித்தி னியல்பு மதன்பெருஞ் சத்தியின்செய்கையுந் தேர்ந்துவிட்டால்,-மனெமே, எத்தனை கோடி இடர்வந்து சூழினும்எண்ணஞ் சிறிது முண்டோ ? |
3 |
| செய்க செயல்கள் சிவத்திடை நின்றெனத்தேவனுரைத் தனனே;-மனமே! பொய்கருதாம லதன்வழி நிற்பவர்பூதல மஞ்ச வரோ? |
4 |
| ஆன்ம வொளிக்கடல் மூழ்கித் திளைப் பவர்க்கச்சமு முண்டோ டா?-மனமே! தேன்மடை யிங்கு திறந்தது கண்டுதேக்கித் திரிவ மடா! |
5 |
| கற்பனை யூரென்ற நகருண்டாம்-அங்குக்கந்தர்வர் விளையாடு வராம். சொப்பன நாடென்ற சுடர்நாடு-அங்குச்சூழ்ந்தவர் யாவர்க்கும் பேருவகை |
1 |
| திருமணை யிதுகொள்ளைப் போர்க்கப்பல்-இதுஸ்பானியக் கடலில் யாத்திரை போம் வெருவுற மாய்வார் பலர் கடலில்-நாம்மீளவும் நம்மூர் திரும்பு முன்னே |
2 |
| அந்நகர் தனிலோர் இளவரசன்-நம்மைஅன்பொடு கண்டுரை செய்திடுவான்; மன்னவன் முத்தமிட் டெழுப்பிடவே-அவன்மனைவியும் எழுந்தங்கு வந்திடுவாள். |
3 |
| எக்கால மும்பெரு நேராகும்-நம்மைஎவ்வகைக் கவலையும் போருமில்லை; பக்குவத் தேயிலை நீர் குடிப்போம்-அங்குப்பதுமை கைக் கிண்ணத்தில் அளித்திடவே. |
4 |
| இன்னமு திற்கது நேராகும்-நம்மையோவான் விடுவிக்க வருமளவும், நன்னக ரதனிடை வாழ்ந்திடு வோம்-நம்மைநலித்திடும் பேயங்கு வாராதே. |
5 |
| குழந்தைகள் வாழ்ந்திடும் பட்டணங்காண்-அங்குக்கோல்பந்து யாவிற்குமுயி ருண்டாம் அழகிய பொன்முடி யரசிகளாம்-அன்றிஅரசிளங் குமரிகள் பொம்மையெலாம். |
6 |
| செந்தோ லசுரனைக் கொன்றிடவே-அங்குச்சிறுவிற கெல்லாம் சுடர்மணி வாள் சந்தோ ஷத்துடன் செங்கலையும் அட்டைத்தாளையுங் கொண்டங்கு மனைகட்டுவோம். |
7 |
| கள்ளரவ் வீட்டினுட் புகுந்திடவே-வழிகாண்ப திலாவகை செய்திடுவோம்-ஓ! பிள்ளைப் பிராயத்தை இழந்தீரே!-நீர்பின்னுமந் நிலைபெற வேண்டீரோ? |
8 |
| குழந்தைக ளாட்டத்தின் கனவை யெல்லாம்-அந்தக்கோலநன் னாட்டிடைக் காண்பீரே; இழந்தநல் லின்பங்கள் மீட்குறலாம்-நீர்ஏகுதிர் கற்பனை நகரினுக்கே |
9 |