பகுதி – 9
பகுதி – 9 நெருப்பில் குளிர் காய்ந்து கொண்டிருந்த பாபா, திடீரென விறகிற்குப் பதிலாகத் தம் கரத்தையே நெருப்பின் உள்ளே வைத்தது ஏன்? பக்தர்கள் கண்ணீருடன் விம்மினார்கள். புன்முறுவலோடு பதில் சொல்லலானார் பாபா… நெருப்பின் உள்ளே கையை விடாமல் வேறு நான் என்ன செய்திருக்க முடியும்? அந்தக் கொல்லனின் மனைவி என் பக்தை அல்லவா? அவள் குழந்தையல்லவா நெருப்பில் விழுந்துவிட்டது? கணவனுக்கு உதவியாக நெருப்பு நன்கு வளரும் வகையில் துருத்தியை இயக்கிக் கொண்டிருந்தாள் அவள். கண்மூடி என்னையே…