பகுதி – 10
பகுதி – 10 பாபா பேச ஆரம்பித்தார். நாம் எல்லோரும் இப்போது பஜனை செய்வோம். அதோ என் மனக்கண்ணால் நான் பார்க்கிறேன். என் அடியவனுக்காகப் பண்டரிபுரத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன! பண்டரிநாதன் என் கண்முன் தோன்றுகிறான்! இப்படிச் சொன்ன பாபா, நான் பண்டரிபுரம் போகவேண்டும், அங்கே தங்க வேண்டும். ஏனெனில், அதுவல்லவோ என் பரமனின் வீடு! அங்கேயல்லவோ நான் வாழவேண்டும்! என்று சப்தம் போட்டுப் பாடலானார். அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே வந்த சாந்தோர்க்கர் மெய்சிலிர்த்தார். அவர் கண்களில் கண்ணீர்…